பஞ்சாப்பில் போர்வெல் குழியில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்டும் காப்பாற்ற முடியவில்லை; 109 மணி போராட்டத்திற்கு பின் சோகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பஞ்சாப்பில் போர்வெல் குழியில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்டும் காப்பாற்ற முடியவில்லை; 109 மணி போராட்டத்திற்கு பின் சோகம்

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் போர்வெல் குழியில் சிக்கிய குழந்தை, 109 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டும், தொடர் சிகிச்சை பலனளிக்காமல் அந்த குழந்தையை காப்பாற்ற முடியாததால், மக்கள் ெபரும் சோகமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் சாங்ரூர் நகரில் பகவான்புரா கிராமத்தில் கடந்த 6ம் தேதி வீடு ஒன்றின் அருகில் பதேவீர் என்ற 2 வயது குழந்தையை விளையாடி கொண்டிருந்தது.

அந்த வீடு அருகே 150 அடி ஆழ ஆழ்துளை கிணறு (போர்வெல்) ஒன்று துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்தது. குழந்தையை மெல்ல நடந்து சென்றபொழுது தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.

இதையறிந்த குழந்தையின் தாய், அதிர்ச்சியடைந்து குழந்தை மீட்க முயன்று முடியாமல் போனது. தகவலறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் தொண்டப்பட்டு, அதன் மூலம் குழந்தையை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.

கிட்டத்தட்ட 5 நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை இன்று காலை 5. 30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தைக்காக பலரும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குழந்தையை உயிருடன் மீட்கப் போராடிய ராணுவத்திற்கும், காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் மீட்பு படையினருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

இருந்தும், ஹெலிக்காப்டர் மூலம் 140 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு, உயர்சிகிச்சை அளிக்கப்பட்டும், குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

காலையில் மகிழ்ச்சியுடன் இருந்த மக்களுக்கு, அடுத்த சில மணி நேரத்தில் குழந்தை இறந்த செய்தி ெபரும் சோகத்தை ஏற்படுத்தியது.

குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததில் இருந்து, தொடர்ந்து 109 மணி நேரம் போராடி, குழந்தையை உயிருடன் மீட்டும் தொடர்ந்து காப்பாற்ற முடியவில்லையே என்று, மீட்புக் குழுவினர் கவலையுடன் தெரிவித்தனர்.

.

மூலக்கதை