சோபியான் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சோபியான் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும், மாநில போலீஸாரும் இணைந்து இன்று காலை அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, பாதுகாப்பு படை வீரர்களை பார்த்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.

பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

.

மூலக்கதை