பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும்: டூ பிளெஸ்சி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும்: டூ பிளெஸ்சி பேட்டி

சவுத்தாம்டன்: ‘‘எங்கள் அணியின் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும்’’ என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளெஸ்சி தெரிவித்துள்ளார். ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. முதலில் தென்னாப்ரிக்க அணி பேட்டிங் செய்தது.

அம்லா 6 ரன், மார்க்ராம் 5 ரன்களுடன் வெளியேறினர். 7. 3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா திணறிய போது, மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

டி காக்(17 ரன்), கேப்டன் டு பிளெஸ்ஸி(0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக பின்னர் நடுவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ேஹால்டர் கூறுகையில், ‘‘பவுலர்கள் நல்ல துவக்கத்தை தந்தனர். குறிப்பாக ஷெல்டன் நன்றாக பந்து வீசினார்.

முதல் 10 ஓவர்களில் எதிரணி ரன் எடுப்பதை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும்.காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் இந்த போட்டியில் ஆடவில்லை. அவர் விரைவில் குணமடைந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்வார்.

தற்போது நல்ல பார்மில் உள்ளோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தை துவக்கினோம்.

ஆனால் மழையால் போட்டி ரத்தானது. அடுத்து நடக்க உள்ள போட்டிகளில் நன்றாக ஆடுவோம்’’ என்று தெரிவித்தார். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸ்சி கூறுகையில், ‘‘மழையால் ஆட்டம் தடைபடுவது என்பது மோசமானது.

இருப்பினும் இயற்கையை நாம் கட்டுப்படுத்த முடியாது. இரு அணிகளுமே போட்டிக்கு முடிவு காண வேண்டும் என்று விரும்பினோம்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் வலுவான பவுலர்கள் உள்ளனர். அதனால் துவக்கத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர்.

எங்கள் அணியின் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும். காயம் காரணமாக இப்போட்டியில் லுங்கி இடம் பெறவில்லை.

அடுத்த போட்டியில் அவர் ஆடுவார்’’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை