இந்தியா வரிக்குறைப்பு: ஏற்க டிரம்ப் மறுப்பு

தினமலர்  தினமலர்
இந்தியா வரிக்குறைப்பு: ஏற்க டிரம்ப் மறுப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா 50 சதவீதமாக வரி குறைத்ததை ஏற்க முடியாது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: நாம் முட்டாள் நாடல்ல. நமது நண்பர் மோடி, அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு 100 சதவீத வரி இந்தியாவால் விதிக்கப்படுகிறது. ஆனால், நாம் எந்த வரியும் விதிக்கவில்லை. ஹார்லி மோட்டார் சைக்கிளை அனுப்பினால், 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. மோடியை அழைத்து, இதனை ஏற்க முடியாது என்றேன்.


இதன் பின்னர், 50 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. அப்போது, இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 50 சதவீத வரிக்குறைப்பு என்பது பெரிய விஷயம் அல்ல. இதனால், அதனை ஏற்று கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை