ராணுவ தளபதியை மீன்களுக்கு இரையாக்கி கொடூரமான முறையில் கொலை செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

தினகரன்  தினகரன்
ராணுவ தளபதியை மீன்களுக்கு இரையாக்கி கொடூரமான முறையில் கொலை செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ தளபதியை மீன்களுக்கு இரையாக்கி கொடூரமான முறையில் கொலை செய்துள்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த ஆத்திரத்தில் அதற்கு ஏற்பாடு செய்த தூதர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேரை கிம் ஜாங் உன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்றார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்ததாக ராணுவ தளபதி ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். தலைநகர் பியாங்யாங்கில் உள்ள தனது வீட்டில் தளபதியின் கை மற்றும் உடல் பகுதிகளை வெட்டி பிரானா மீன்களுக்கு இரையாக்கியுள்ளார். இதனிடையே வடகொரியாவில் 600-க்கும் மேற்பட்டோருக்கு பொதுஇடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆதாரத்துடன் கண்டறியபட்டுள்ளதாக நீதித்துறை குழு தெரிவித்தனர். கடந்த 2013-ம் ஆண்டு தமது உரையின் போது சத்தமாக கைதட்டவில்லை என்பதற்காக சொந்த மாமாவையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தந்தையிடம் இருந்து ஆட்சி பொறுப்பை பெற்ற பிறகு கிம் ஜாங் உன் இதுவரை அரசில் உயர் பதவி வகித்த 16 பேரை கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வடகொரியாவில் தனக்கு எதிராக நிறைய கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். அவர்களுக்குப் பயந்தபடியே கிம் ஆட்சி நடத்தி வருகிறார். கிளர்ச்சியாளர்களுக்கும் தன் நம்பிக்கைக்குரியவர்களுக்கும் பயத்தைக் காட்டவே அவர் இவ்வாறு தொடர் கொலைகள் செய்துவருவதாக’ இங்கிலாந்து உளவுத்துறை தெரிவிப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை