மகள் திருமணம் நடக்கும்போது தந்தை தூக்கிட்டு தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகள் திருமணம் நடக்கும்போது தந்தை தூக்கிட்டு தற்கொலை

திருவனந்தபுரம்: மகளின் திருமண தினத்தன்று தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுததியது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பாரிபள்ளிைய சேர்ந்தவர் சிவபிரசாத் (44).

இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவருக்கு ஜலஜா  என்ற மனைவியும், லிபின் என்ற மகனும், நீடு, பிரிஜா என்று 2 மகள்களும் உள்ளனர்.

நீடுவுக்கும் அந்த பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 11 மணிக்கு அருகில் உள்ள கோயில் மண்டபத்தில் திருமணம் நடந்தது.

காலை 6 மணியளவில் சிவபிரசாத் பைக்கில் வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதனால் மனைவி மற்றும் உறவினர்கள்  பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டின்  படுக்கை அறையில் சிவபிரசாத் தூக்கில் தொங்கிய நிலையில்  இறந்து கிடந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாரிபள்ளி போலீசார் சென்று சிவபிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த  சம்பவம் எதையும் மணமகளிடம் தெரிவிக்காமல் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

அதன் பின்னரே நீடுவுக்கு தெரிவிக்கப்பட்டது.   தனது திருமண நாளில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை கேட்டு அவர் கதறி அழுதார்.

.

மூலக்கதை