முதல்வருக்கு எதிராக கருத்து: வாலிபர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வருக்கு எதிராக கருத்து: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோட்டயம் அருகே சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்தவர் மகேஷ்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது பேஸ்புக்கில் முதல்வர் பினராயி  விஜயன் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டார். அதில், ‘’முதல்வர் சமீபத்தில் இங்கிலாந்து உள்பட சில வெளிநாடுகளுக்கு சென்று  வந்தார்.

இதனால் கேரளாவுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், குடும்பத்துடன் சுற்றுலா சென்று ஜாலியாக இருந்துள்ளார்’’ என்றும்  குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து சங்கனாச்சேரி பகுதி சிபிஎம் செயலாளர் அஜிகுமார் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.   விசாரணைக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

.

மூலக்கதை