இன்று மேற்கிந்திய தீவுகளுடன் மோதல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று மேற்கிந்திய தீவுகளுடன் மோதல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

சவுத்தாம்டன்: ஐசிசி உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.   இத்தொடரில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி, மூன்றிலுமே தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்துள்ளது. எனவே இன்றைய போட்டியில்  வென்றேயாக வேண்டும் என்ற முனைப்புடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

தென்னாப்பிரிக்க அணி நடப்பு உலக கோப்பை  தொடரில் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது போட்டியில்  104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா படுதோல்வியடைந்தது.

அடுத்து வங்கதேச அணியும் 21 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை  வீழ்த்தியது. கடந்த 5ம் தேதி நடந்த போட்டியில் இந்திய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்ந்தது.3 தோல்விகளுக்கு பின்னர், அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கு தகுதி பெற  முடியும். எனவே இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக புதிய உத்திகளுடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்க உள்ளது.

இத்தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை 2 போட்டிகளில் ஆடியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் வெற்றி  பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ளது.   ஆஸி. அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர்கள் ஒசானே தாமஸ், ரஸல் மற்றும் காட்ரல் முதல் ஸ்பெல்லில்  மிரட்டினர்.   வார்னர், பிஞ்ச், கவாஜா மற்றும் மேக்ஸ்வெல் என டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தனர். இதனால் 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து  38 ரன்கள் என ஆஸி. அணி பரிதாப நிலையை எட்டியது.

ஆனால் அதன் பின்னர் மேற்கிந்திய  தீவுகள் அணியின் பவுலர்களால் ஆஸி. பேட்ஸ்மென்கள் ஸ்மித், கேரி மற்றும் கோல்டர் நைலை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் ஆஸி. அணி  288 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மென்களும் இப்போட்டியில் நன்றாக ஆடினர் என்றே கூற வேண்டும். ஷாய் ஹோப், பூரன், ஜேசன் ஹோல்டர்  ஆகியோர் வெற்றிக்காக போராடினர்.

இருப்பினும் இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.   இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு சதவீதம் அதிகம் என்பதால், டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு அணிகளும் உலகக்கோப்ைப போட்டிகளில் இதுவரை 6 முறை மோதியுள்ளன.

அவற்றில் தென்னாப்பிரிக்கா 4 முறையும், மேற்கிந்திய தீவுகள்  அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

.

மூலக்கதை