கேரளாவில் காற்றுடன் பலத்த மழை: மக்களுக்கு ஆரஞ்சு அலார்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் காற்றுடன் பலத்த மழை: மக்களுக்கு ஆரஞ்சு அலார்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மழை மேலும் வலுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் நேற்று முன்தினம் முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.

இதன்காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா உள்பட தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாளை முதல் கோழிக்கோடு, கண்ணூர் உள்பட வடமாவட்டங்களில் பருவமழை தீவிரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம், மலப்புரம் மாவட்டங்களில் இன்றும், திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் நாளையும், 12ம் தேதி எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களிலும் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அரபிக்கடலில் லட்சத்தீவை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால் கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும்.

பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

.

மூலக்கதை