பட வேட்டையில் இறங்கியிருக்கும் நடிகை

என் தமிழ்  என் தமிழ்
பட வேட்டையில் இறங்கியிருக்கும் நடிகை

தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது தமிழ் படங்களை கைப்பற்ற தீவிர பட வேட்டையில் இறங்கி இருக்கிறாராம்.

தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான ‘டாப்’ நடிகை, மும்பை சென்று இந்தி பட வேட்டையில் இறங்கினாராம். அவருடைய முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்ததாம். மளமள வென்று மூன்று இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவர் கைப்பற்றினாராம்.

இந்தி படங்களில் நடித்தாலும் அவரால் தமிழ், தெலுங்கு பட உலகை மறக்க முடியவில்லையாம். மறுபடியும் தெற்கு நோக்கி வலைவீசி இருக்கிறாராம். இங்கே இதுவரை எந்த மீனும் அவருடைய வலையில் சிக்கவில்லையாம். இருப்பினும், ‘டாப்’ நடிகை தன் முயற்சியை கைவிடவில்லையாம். தீவிரமாக தமிழ் படங்களை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை