ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் வலுவான இங்கிலாந்தை சமாளிக்குமா பாகிஸ்தான்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் வலுவான இங்கிலாந்தை சமாளிக்குமா பாகிஸ்தான்?

நாட்டிங்ஹாம்:  ஐசிசி உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வலிமையான இங்கிலாந்து அணியுடன், பாகிஸ்தான் மோதவுள்ளது.   நடப்பு உலகக்கோப்பை தொடரில் 2 அணிகளும் இதுவரை தலா ஒரு போட்டியில் ஆடியுள்ளன. கடந்த 30ம் தேதி லண்டன், ஓவலில் நடந்த  உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

கடந்த  31ம் தேதி நாட்டிங்ஹாமில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம்  தோல்வியடைந்துள்ளது. எனவே வெற்றியை தக்க வைக்கும் முனைப்புடன் இங்கிலாந்தும், முதல் வெற்றியை குறி வைத்து பாகிஸ்தானும் இன்றைய போட்டியில்  களமிறங்குகின்றன.

நாட்டிங்ஹாமில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பாக். அணியின் பேட்ஸ்மென்கள் மொத்தமாக சொதப்பி விட்டனர்.

21. 4  ஓவர்களில் 105 ரன்களுக்கு பாக். அணி ஆல்-அவுட் ஆனது.

ஓபனர் பகர் ஜமானும், 3வது வீரராக இறங்கிய பாபர் அசமும் தலா 22 ரன்கள்  எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததே, அணியின் தோல்விக்கு காரணமானது.

13. 4  ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெற்று விட்டது. இங்கிலாந்து அணி, தனது முதல் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியுள்ளது. சொந்த மைதானத்தில், ரசிகர்களின் ஆதரவுடன்  களமிறங்கும் இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்றே முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தானுக்கு ‘கணிக்கவே முடியாத அணி’ என்ற பெயர் உண்டு.

ஒரு போட்டியில் மோசமாக தோல்வியடைந்து விட்டு, அடுத்த  போட்டியில் நம்ப முடியாத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிரமாண்ட வெற்றி பெற்று பிரமிக்க வைப்பார்கள் பாகிஸ்தான் வீரர்கள்.   இன்றைய போட்டியில் அந்த மாயாஜாலம் நிகழுமா என்று பாக். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 9 முறை மோதியுள்ளன. அவற்றில் தலா 4 வெற்றிகள் என்று இரு அணிகளும்  சமநிலையில் உள்ளன.

ஒரு போட்டி வெற்றி, தோல்வியின்றி முடிவு காணப்படாமல் பாதியில் ரத்தாகி இருக்கிறது.

.

மூலக்கதை