1983, 2011-ல் இந்தியா சாம்பியன் கபில், தோனி சாதித்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
1983, 2011ல் இந்தியா சாம்பியன் கபில், தோனி சாதித்தனர்

லண்டன்: கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, முதன் முதலாக உலகக்கோப்பையை வென்ற போது, கிரிக்கெட் உலகமே உறைந்தது என்றுதான் கூற வேண்டும். அதற்கு முன்னதாக 1975 மற்றும் 1979ம் ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி, படுமோசமாக ஆடியிருந்தது.

இதனால் 1983ம் ஆண்டு கோப்பையை வெல்லும் அணிகளின் பட்டியலில் இந்தியா இல்லவே இல்லை. ஆனாலும் கோப்பை இந்தியா வசமானது.

அதற்கு காரணம் ஒற்றை மனிதர். கபில்தேவ். . . !‘‘துவக்கத்தில் இருந்தே நம்பிக்கையுடன் இருந்தார் கபில்தேவ்.

இந்தியா கோப்பையை நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை அவருக்கு மட்டுமே இருந்தது’’ என்று அன்றைய இந்திய அணியில் இடம் பெற்றிருந்த காந்த் கூறியுள்ளார். கபிலின் தன்னம்பிக்கைக்கு சான்று, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அவரது ருத்ர தாண்டவம்.

5 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் என பரிதாபமாக காட்சியளித்தது இந்திய அணி. இன்னும் போட்டி முடியவில்லை என்று சொல்லி விட்டு மைதானத்தில் இறங்கினார் கபில்தேவ்.

அன்று அவர் விளாசியது 138 பந்துகளில் 175 ரன்கள். 16 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி என்பது அன்றுதான் துவங்கியது. ஒருநாள் போட்டிகளில் அவரது ஒரே சதம் அதுதான். . . . . பின்னர் லண்டன் லார்ட்சில் நடந்த பைனலில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 54. 4 ஓவர்களில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

காந்த் 38 ரன்கள், அமர்நாத் 26 ரன்கள், சந்தீப் பாட்டீல் 27 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஆன்டி ராபர்ட்ஸ் 10 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.183 ரன்கள் என்ற இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆனது. அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் 33 ரன்களில் கபிலின் அட்டகாசமான கேட்சில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் கீப்பர் ஜெப் டூஜான் 25 ரன் எடுத்தார்.   இந்திய தரப்பில் மதன்லால் 12 ஓவர்களில் 31 ரன்களை கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். 7 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டு வீழ்த்திய மொகீந்தர் அமர்நாத் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

டோனி தலைமையிலான இந்திய அணிக்கு 2011 உலகக்கோப்பை2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பைனலில் இந்திய-இலங்கை அணிகள் மோதின.

முதலில் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. மகேலா ஜெயவர்த்தனா 103 ரன்கள், குமார் சங்ககரா 48 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் யுவராஜ் சிங், ஜாஹிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 275 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 48. 2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வென்றது.

கவுதம் காம்பீர் 97 ரன்கள், விராட் கோஹ்லி 35 ரன்கள், கேப்டன் டோனி 91 ரன்கள், யுவராஜ் 21 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் மலிங்கா 9 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

.

மூலக்கதை