பூங்காவில் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் 2 பேரை கொன்று மர்ம நபர் கழுத்தறுத்து தற்கொலை: ஜப்பான் நாட்டில் பயங்கரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பூங்காவில் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் 2 பேரை கொன்று மர்ம நபர் கழுத்தறுத்து தற்கொலை: ஜப்பான் நாட்டில் பயங்கரம்

டோக்கியோ: ஜப்பானில் உள்ள பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் பெண் குழந்தை உட்பட 2 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த பின், அங்கிருந்த 17 பேரை காயப்படுத்தி, அவனும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டான்.   ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் உள்ள பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். அப்போது அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர், திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார்.இதில், பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குத்ல் நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.

திடீரென அந்த நபர், தனது கழுத்தில் கத்தியை வைத்து, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த போலீசார், பூங்காவை சுற்றியுள்ள சாலைக்கு ‘சீல்’ வைத்து, அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூங்காவில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை