காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பில்லை; அதனால் ராகுல் பதவி விலகமாட்டார்: திருநாவுக்கரசர் பேட்டி

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பில்லை; அதனால் ராகுல் பதவி விலகமாட்டார்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேரு நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் ஏற்படும் வெற்றி, தோல்வி ஒரு தலைவரின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடியதில்லை என்று கூறினார். காங்கிரஸ் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பில்லை; அதனால் ராகுல் பதவி விலகமாட்டார் என அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை