76 நாட்கள் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது: தேர்தல் ஆணையம்

தினகரன்  தினகரன்
76 நாட்கள் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தது: தேர்தல் ஆணையம்

டெல்லி: 76 நாட்கள் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ளது. 17-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான தேர்தல் தேதி மார்ச் மாதம் 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. அதன்படி, “புதிதாக எந்த நலத்திட்டங்களையும் அரசு அறிவிக்கக் கூடாது. அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது. அரசு விழாக்கள் நடைபெறக் கூடாது” என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இதனை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி வாக்கு எண்னிக்கை நடத்தப்பட்டது. இதில் 344 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தேர்வாகிறார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக 2வது முறையாக நரேந்திர மோடி (68) வரும் 30ம் தேதி பதவியேற்கிறார்.  இதனை தொடர்ந்து 76 நாட்கள் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, உடனடியாக தேர்தல் நடை முறைகளும் வாபஸ் பெறப்பட்டன. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் இன்று அரசு பணிக்கு திரும்ப இருக்கிறார்கள்.

மூலக்கதை