இந்தியா ஏ 622/5 டிக்ளேர்

தினகரன்  தினகரன்
இந்தியா ஏ 622/5 டிக்ளேர்

பெல்காம்: இலங்கை ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அங்கீகாரமற்றது), இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. யூனியன் ஜிம்கானா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 376 ரன் எடுத்திருந்தது. கேப்டன் பாஞ்ச்சால் - ஈஸ்வரன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 352 ரன் சேர்த்து அசத்தியது. பாஞ்ச்சால் 160 ரன் விளாசி ஆட்டமிழந்தார். ஈஸ்வரன் 189 ரன், ஜெயந்த் யாதவ் 6 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெயந்த் 8 ரன்னில் வெளியேற, இரட்டை சதம் விளாசிய ஈஸ்வரன் 233 ரன் (321 பந்து, 22 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். ரிக்கி புயி 1 ரன்னில் வெளியேறினார். அன்மோல்பிரீத் சிங் - சித்தேஷ் லாட் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 153 ரன் சேர்த்தது. சித்தேஷ் 76 ரன் எடுத்து (89 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். இந்தியா ஏ அணி 142 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 622 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அன்மோல்பிரீத் 116 ரன்னுடன் (165 பந்து, 11 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய இலங்கை ஏ அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்துள்ளது.  இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை