சும்மா... கொக்கரக்கோன்னு கூவிட்டே கிடந்தா... மனுஷன் தூங்க முடியுதா?

தினகரன்  தினகரன்
சும்மா... கொக்கரக்கோன்னு கூவிட்டே கிடந்தா... மனுஷன் தூங்க முடியுதா?

புனே: மகாராஷ்டிராவில் தனது வீட்டின் முன் தினமும் அதிகாலையில் சேவல் வந்து கூவுவதால் தன்னால் தூங்க முடியவில்லை என பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த பெண் ஒருவர் சாமர்த் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘தினந்ேதாறும் அதிகாலை நேரத்தில் எனது வீட்டின் முன் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் சேவல் வந்து கூவுகிறது. அதன் சத்தத்தால் என்னால் தூங்க முடியவில்லை. இது எனக்கு இடையூறாக இருக்கிறது.  எனவே, சேவலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அப்பெண் குறிப்பிட்டுள்ளார். புகாரை பெற்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட முகவரியில் இருக்கும் வீட்டிற்கு சென்று விசாரித்தோம். அங்கு, புகார் கொடுத்த பெண்ணின் சகோதரர் வசிக்கிறார். சில நாட்கள் தங்குவதற்காக வந்த தனது சகோதரி, இந்த புகாரை கொடுத்ததாக கூறிய அவர், சகோதரி ஊருக்கு சென்று விட்டதாக தெரிவித்தார். மேலும் அவர் சிறிது மனநிலை சரியில்லாதவர் என்றார். எனவே, புகார் தொடர்பாக வழக்கு பதியவில்லை,” என்றார்.

மூலக்கதை