நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்

தினகரன்  தினகரன்
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் எச்.வசந்தகுமார்

சென்னை: நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்யவுள்ளதாக எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் வசந்த குமார் எம்.பி. செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

மூலக்கதை