அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்

தினகரன்  தினகரன்
அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார்

ஜப்பான்: அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடினார். அதே சமயம் இரு தலைவர்களின் மனைவிகளும் அங்குள்ள டிஜிட்டல் அருங்காட்சியகத்தில் ஒன்றாக நேரத்தை செலவிட்டனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவி மெலானியா ட்ரம்புடன், 4 நாள் அரசுமுறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில் ஜப்பானின் சிபா கோல்ப் சங்க மைதானத்தில், அதிபர் ட்ரம்ப்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் கோல்ப் விளையாடினர். முன்னதாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அதிபர் ட்ரம்பை வரவேற்ற பிரதமர் அபே, தானே வாகனத்தை இயக்கி மைதானத்துக்கு அழைத்து சென்றார்.பின்னர் அங்கு கோல்ஃப் விளையாடிய இருதலைவர்களும் ஒன்றாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அதே வேளையில் அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்பும், பிரதமர் ஷின்சோ அபேவின் மனைவி ஏக்கி அபேவும், டோக்யோவிலுள்ள டிஜிட்டல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். டீம்லேப் பார்டர்லெஸ் என்ற அந்த அருங்காட்சியகத்தில் வண்ண விளக்குகளை பார்வையிட்ட இருவரும், அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

மூலக்கதை