ஒரு போட்டியில் பெற்ற தோல்வியை வைத்து, இந்திய வீரர்களின் திறமையை தவறாக எடைபோட வேண்டாம்: ஜடேஜா

தினகரன்  தினகரன்
ஒரு போட்டியில் பெற்ற தோல்வியை வைத்து, இந்திய வீரர்களின் திறமையை தவறாக எடைபோட வேண்டாம்: ஜடேஜா

டெல்லி:  ஒரு போட்டியில் பெற்ற தோல்வியை வைத்து, இந்திய வீரர்களின் திறமையை தவறாக எடைபோடவேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பைத் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.இந்திய வீரர்களுள் ரவீந்திர ஜடேஜா மட்டுமே சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். போட்டி முடிந்த நிலையில், இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்த ஜடேஜா, ஒரு போட்டியில் கிடைத்த மோசமான தோல்வியால், இந்திய அணியின் பேட்டிங்கை குறைத்து மதிப்பிடவேண்டாம் என்றார். அணியில் திறமைமிக்க பல வீரர்கள் உள்ளதாக கூறிய அவர், இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

மூலக்கதை