சீனாவில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிப்பு

தினகரன்  தினகரன்
சீனாவில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிப்பு

சீனா: சீனாவில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விழுந்ததில், 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்திலுள்ள ஷாங்ஷூ பகுதியில் சிறார்களுக்கான நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமான சிறார்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் குழுப்புகைப்படம் எடுப்பதற்காக, போட்டியில் பங்கேற்ற அனைத்து சிறார்களும் ஒரே நேரத்தில் மேடையில் ஏறியுள்ளனர். அப்போது மேடையின் மையப்பகுதி திடீரென உள்புறமாக சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடன நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மூலக்கதை