சிலம்பாட்ட பயிற்சி முகாம்

தினகரன்  தினகரன்
சிலம்பாட்ட பயிற்சி முகாம்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தில் சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் பங்கேற்பவர்களுக்கு அடிப்படை பயிற்சியும், மற்றவர்களுக்கு தாக்குதல் பயிற்சியும் கற்றுத் தரப்படுகின்றன.  செங்குன்றத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் மாவட்டச் செயலாளர் மாஸ்டர்கள் பூஜாபிரியா, கமலக்கண்ணன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். இது குறித்து மாவட்ட செயலாளர் முருககனி, ‘ திருவள்ளூர் மாவட்டத்தில் சிலம்பாட்டக்கலை பாரம்பரிய விளையாட்டாக காலம் காலமாக உள்ளது. சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் நடைப்பெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் 15 தங்கம், 3 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர்’ என்றார்.

மூலக்கதை