தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை

தினகரன்  தினகரன்
தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை

தென் ஆப்ரிக்க அணியுடன் கார்டிப், சோபியா கார்டன்சில் நேற்று முன்தினம் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 87 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் (அம்லா 65, மார்க்ராம் 28, கேப்டன் டு பிளெஸ்ஸி 88, வான் டெர் டஸன் 40, டுமினி 22, பெலுக்வாயோ 35, பிரிடோரியஸ் 25*, மோரிஸ் 26*). இலங்கை அணி 42.3 ஓவரில் 251 ரன்னுக்கு ஆல் அவுட் (கேப்டன் கருணரத்னே 87, குசால் மெண்டிஸ் 37, ஏஞ்சலோ மேத்யூஸ் 64). தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பெலுக்வாயோ 4, என்ஜிடி 2, ரபாடா, தாஹிர், பிரிடோரியஸ், டுமினி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை