கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்

பாரிஸ்: பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன், ரோலண்ட் கேரோஸில் இன்று தொடங்குகிறது. களிமண் தரை மைதானங்களில் நடைபெறும் இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் (ஸ்பெயின்), நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் உட்பட முன்னணி வீரர்கள் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகின்றனர். பிரெஞ்ச் ஓபனில் நடால் 11 முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முறை இளம் வீரர்கள் டொமினிக் தீம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் கோப்பையை முத்தமிட வரிந்துகட்டுவதால் மும்மூர்த்திகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப் (ரோமானியா), நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்), அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவா (செக்.), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பெத்ரா குவித்தோவா (செக்.) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மூலக்கதை