மகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல்

தினமலர்  தினமலர்
மகன்களுக்கு சீட் கேட்டு தலைவர்கள் நெருக்கடி: ராகுல்

புதுடில்லி: லோக்சபா தேர்தலில்,கட்சி நலனை கருத்தல் கொள்ளாமல், மகன்களுக்கு சீட் கேட்டு சில தலைவர்கள் நெருக்கடி கொடுத்தாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

மகன்களுக்கு சீட்


சமீபத்தில், லோக்சபாவில், 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தனியாக, 303 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, 353 தொகுதிகளிலும் வென்று, பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைகிறது.இந்தத் தேர்தலிலும், மிகவும் மோசமான படுதோல்வியை, காங்கிரஸ் சந்தித்துள்ளது. இது குறித்து ஆராய்வதற் காக, காங்கிரஸ் உயர் மட்டஅமைப்பான, செயற்குழு கூட்டம், நேற்று டில்லியில் கூடியது.

இந்த கூட்டத்தில் பேசிய ஜோதிராதித்யா சிந்தியா, உள்ளூரில் வலிமையான தலைவர்களை காங்கிரஸ் உருவாக்க வேண்டும் என்றார்.
அப்போது ராகுல் குறுக்கிட்டு கூறியதாக வெளியான தகவல்: காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் கட்சி மோசமாக செயல்பட்டது. சீட் கொடுக்க முடியாது என தெரிவித்தும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ஆகியோர் தங்களது மகன்களுக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். பிரசாரத்தின் போது பா.ஜ., மற்றும் மோடிக்கு எதிராக நான் எழுப்பிய பிரச்னைகளை காங்கிரஸ் தலைவர்கள் முன்னெடுத்து செல்லவில்லை எனக்கூறியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜினாமா நிராகரிப்பு:


கூட்டத்தில் பேசிய ராகுல், லோக்சபா தேர்தலில் காங்., கட்சி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறினார். ஆனால் அவருடைய ராஜினாமா கோரிக்கை கமிட்டியினரால் நிராகரிக்கப்பட்டது.

மூலக்கதை