எம்எல்ஏ.க்கள் எம்பி.யாகி விட்டதால் 49 பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்: 14 மாநிலங்களில் நடக்கிறது

தினகரன்  தினகரன்
எம்எல்ஏ.க்கள் எம்பி.யாகி விட்டதால் 49 பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்: 14 மாநிலங்களில் நடக்கிறது

புதுடெல்லி: நாடு முழுவதும் பல மாநிலங்களில் எம்எல்ஏ.க்ளாக இருந்த 49 பேர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், 14 மாநிலங்களில் அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதம் 16 மாநிலங்களில்  எம்.எல்.ஏ.க்களாக உள்ள 49 பேர், எம்.எல்.சிக்களாக உள்ள 2 பேர்,  மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள 4 பேர்,  நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால்,  இவர்கள் தற்போது வகிக்கும் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களில் இந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, ஜார்கண்ட், அரியானா மாநிலங்களில் அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இங்கு காலியாகும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாது. ஆனால், 14 மாநிலங்களில் 49 எம்எல்ஏ மற்றும்  எம்.எல்.சி பதவிக்கு இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 11 எம்.எல்.ஏக்களும், பீகாரில் 5  எம்.எல்.ஏக்கள், 2 எம்.எல்.சிக்கள் ஆகியோர் மக்களவைக்கு செல்கின்னறர். மொத்தம் 49 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 2 எம்.எல்.சி பணியிடங்களுக்கும் அடுத்த 6  மாதங்களில் இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. உத்தரப் பிரதேதசத்தில் புதிய எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் ரீட்டா பகுகுணா ஜோஷி, சத்யதேவ் பச்சாரி, எஸ்.பி.சிங் பாகல் ஆகியோர் மாநில அமைச்சர்களாக உள்ளனர்.

மூலக்கதை