ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்த ஓபிஎஸ்

தினகரன்  தினகரன்
ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்த ஓபிஎஸ்

சென்னை: தமிழக  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  மதுரையில் இருந்து நேற்று பகல் 1 மணி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மோடியே  வரவேண்டும் என்ற மக்களின் தீர்ப்பாகத்தான் நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா காட்டிய நல்லாட்சி தொடர வேண்டும் என்ற தீர்ப்புதான் நல்ல தீர்ப்பாக வந்துள்ளது. என்று கூறிவிட்டு பேட்டியை முடித்து விட்டு திரும்பினார். ஆனால், நிருபர்கள் பல்வேறு கேள்விகளை தொடர்ந்தனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஒரு விரலை காட்டி ஒரு கேள்வி, ஒரே பதில்தான் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

மூலக்கதை