அசத்திப்புட்டிங்க நண்பரே... மோடிக்கு அமெரிக்க தலைவர்கள் வாழ்த்து

தினகரன்  தினகரன்
அசத்திப்புட்டிங்க நண்பரே... மோடிக்கு அமெரிக்க தலைவர்கள் வாழ்த்து

வாஷிங்டன்: மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதற்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கும் அவரது பா.ஜ கட்சிக்கும் வாழ்த்துக்கள். பிரதமர் மோடியின் 2வது ஆட்சி காலத்தில் இந்திய அமெரிக்க இணைந்து செயல்படுவதில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. முக்கிய பணிகளை நாம் ஒன்றாக தொடர்ந்து செய்வோம் என எதிர்பார்க்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். துணை அதிபர் மைக் பென்ஸ் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் நட்பு நாட்டின் நண்பர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். ஜனநாயகத்துக்கான உறுதியை இந்திய மக்கள் வலுவாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவை பாதுகாப்பான மற்றும் வளமான பகுதியாக மாற்றுவதற்கு இணைந்து செயல்படுவோம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ டிவிட்டரில் விடுத்துள்ள தகவலில், ‘இந்திய தேர்தலில் தே.ஜ கூட்டணி வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கும், மிகப் பெரிய தேர்தலில் வாக்களித்த மக்களுக்கும் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.எல்லாருக்கும் நன்றி... நன்றி...மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற மோடிக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அவர்களுக்கு மோடி நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடாபாக நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நன்றி தெரிவித்த மோடி `அன்பு நண்பரே உங்களின் வாழ்த்துக்கு நன்றி, இந்தியா - ரஷ்யா இடையே தற்போது நிலவும் உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது, இந்த உறவு தொடர உங்கள் ஆதரவு தேவை’ என்று கூறியுள்ளார்திரையுலகினருக்கு நன்றிஇதுபோல், மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு பாலிவுட் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து தெரிவித்த ஷில்பா ஷெட்டி குந்தரா, ரவீனா தண்டன், ஆர்.மாதவன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், சரோத் இசைக்கலைஞர் அஜ்மத் அலிகான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் உங்களின் வாழ்த்தால் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதேபோல் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை