உலகின் முதல் கண்டுபிடிப்பால் சாதித்த தமிழர்- இங்கல்ல; ஜப்பானில்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலகின் முதல் கண்டுபிடிப்பால் சாதித்த தமிழர் இங்கல்ல; ஜப்பானில்!

உலகின் முதல் கண்டுபிடிப்பால் ஒரு தமிழர் சாதித்து உள்ளார். அவரது சாதனையை ஜப்பான் அரசு அங்கீகரித்து உள்ளது.

இந்த சாதனையின் பின்னணியை அறிந்து கொள்வோம்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவர் ஒரு இயந்திரப் பொறியாளர் ஆவார். குமாரசாமி, முழுவதுமாக தண்ணீரிலேயே இயங்கும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
 இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாத வகையில் இயங்குவதுதான் இதன் சிறப்பு அம்சம். 

குமாரசாமி இது பற்றிக் கூறியதாவது:

“இந்த இயந்திரத்தை கண்டுபிடிக்க எனக்குப் பத்து ஆண்டுகள் ஆனது. உலகிலேயே இந்த அம்சம் கொண்ட கண்டுபிடிப்பு இதுதான் முதல் முறை. இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக்க எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும்.

இதை முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதுதான் எனது பெரும் கனவு. அதற்காக இங்குள்ள பல நிறுவனங்களின் கதவுகளைத் தட்டினேன். ஆனால் யாரும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதன் பிறகு என் திட்டத்தை ஜப்பான் அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றேன். அவர்கள் உடனடியாக எனக்கு வாய்ப்பு வழங்கினார்கள். 

விரைவில் இது ஜப்பானில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என நம்புகிறேன்”,  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இந்த அரிய இயந்திரத்தை கண்டுபிடித்த குமாரசாமிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  அவர் ஒரு தமிழர் என்பதால் வலைத்தமிழ் அவரை மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துகின்றது.

மூலக்கதை