பெட்ரோல்-டீசல் விலையை குறுஞ்செய்தி மூலம் அறிய இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பெட்ரோல்டீசல் விலையை குறுஞ்செய்தி மூலம் அறிய இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு!

பெட்ரோல்- டீசல் விலையை குறுஞ் செய்தி மூலம் அறிந்து கொள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

பெட்ரோல்- டீசல் விலை நாளுக்கு நாள் மாறி வருகின்றது. ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளது. இதன் காரணமாக இதர விலைவாசிகளிலும் சிறிதளவு மாற்றம் ஏற்படுகின்றது.

எல்லா விலைகளையும் தற்போது ஆன்லைனில் உடனுக்குடன் தெரிந்து கொண்டாலும், சில தகவல்களை குறுஞ்செய்திகள் மூலமும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. ஆனால் பெட்ரோல்- டீசல் விலைகளைப் பொருத்தவரை அறிந்து கொள்ள குறுஞ்செய்தி வசதி இதுவரை இல்லாமல் இருந்தது.

தற்போது குறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விலையை அறிய Rsp 133593 என டைப் செய்து 9224992249 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அனுப்பிய உடனேயே அந்த எண்ணுக்கு அந்த நேரத்தில் அமலில் உள்ள பெட்ரோல்,டீசல் விலை விவரம் குறுஞ்செய்தி தகவலாகக் கிடைக்கும்.

இந்த ஏற்பாட்டை இந்தியன் ஆயில் நிறுவனம் செய்துள்ளது. இது தொடர்பான விவரங்களை அந்நிறுவனம் ஒரு அறிக்கையில்  தெரிவித்துள்ளது.  

மூலக்கதை