2015 -2019 காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து மூலமாக ரூ.5366 கோடி வசூல்: ரயில்வே தகவல்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
2015 2019 காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து மூலமாக ரூ.5366 கோடி வசூல்: ரயில்வே தகவல்

2015 - 2019-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து செய்தவர்களிடம் இருந்து ரூ.5366 கோடி கட்டணமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக  செய்தி வெளியாகி உள்ளது. 

வெளியூர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு,  எதிர்பாராத விதமாகப் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்யும் நிலை ஏற்படுகின்றது.

கடந்த 2015-ம் ஆண்டு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப் பட்டது. அதன்படி, ரயில் புறப்படும் நேரத்தை மையமாக வைத்து முன்பதிவை ரத்து செய்யும் நாட்களை கணக்கில் கொண்டு கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது. ரயில் இருக்கை உறுதி செய்யாமல் காத்திருப்போர் பட்டியலில் இருந்தாலும், அதனை ரத்து செய்யும் போதும் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரயில் டிக்கெட் ரத்து செய்தவர்களிடம் இருந்து எவ்வளவு ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு  ரயில்வே அமைச்சகம் பதிலளித்து உள்ளது.

2015 - 2019-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரயில் டிக்கெட் ரத்து செய்தவர்களிடமிருந்து ரூ.5366 கோடி கட்டணமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த தொகை அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மூலக்கதை