நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்!

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி   350   தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று இருப்பதால்நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராகிறார்.

தேர்தல் ஏப்ரல் 11ல் துவங்கிய நாடாளுமன்ற தேர்தல்  மே 19- ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்தத்  தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 8 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதியில் தோல்வி அடைந்தார்.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 545 இடங்கள். நியமன எம்.பி.க்கள் இருவர். முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி நீங்கலாக, மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி, 350 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமர் ஆகிறார்.

காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களையும், ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 25 எம்.பி. தொகுதிகளிலும், சந்திரசேகர ராவ் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சி 8 தொகுதிகளையும், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதி களையும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளையும் மற்ற கட்சிகள் 33 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன. இந்த தேர்தல் மூலம் பாரதீய ஜனதா கட்சிக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது.தமிழகத்தைப் பொறுத்த வரையில் பா.ஜ.க. வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் பெரும் தோல்வியே கிட்டியுள்ளது. 

இந்தத் தேர்தலில் 303 இடங்களில் பாரதீய ஜனதா  தனிப்பெரும் கட்சியாக மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.இந்த மாதம் 30-ம் தேதிக்குள் பிரதமர் மோடி பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. 9 இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பதால் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மூலக்கதை