ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு!

நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. பாடத்தின் கீழ் நடத்தப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

www.cisce.org என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மாணவ, மாணவியருக்கு பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

மேலும், 09248082883 என்ற எண்ணுக்கு ஐ.சி.எஸ்.இ ஐடி மற்றும் ஐ.எஸ்.சி. ஐடியை டைப் செய்து அனுப்பினால், குறுஞ்செய்தி (SMS) மூலம் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
 2.5 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வு எழுதி உள்ளனர்.மார்ச் 25 ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைந்தது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஐசிஎஸ்இ, ஐ.சி.சி முடிவுகள் வெளியாகி உள்ளது. 91.10% சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் தகுதி பெற்றனர். அதே போல், சிபிஎஸ்இ 12 ம் வகுப்பில் 83.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 தேர்வு எழுதினர்.

மூலக்கதை