சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

 சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.


சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் cbse.nic.in, cbseresults.nic.in  results.nic.in போன்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.


மே 3-வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது வெளியாகி உள்ளது. 


நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என சுமார் 31 லட்சம் பேர் எழுதினர். ஏப்ரல் 4-ம் தேதி தேர்வுகள் முடிந்த நிலையில் ஒரு மாதத்திலேயே முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 4,974 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்களிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 

மூலக்கதை