ெதற்காசியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் 253 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ெதற்காசியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் 253 பேர் பலி

இலங்கையில் ஒரே நாளில் வேரூன்றியதா ஐஎஸ்?: சர்வதேச புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பு: விடுதலை புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஓய்ந்து அமைதி திரும்பிய நிலையில், கடந்த 21ம் தேதி ஏசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளில் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயம், நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற போது, யாரும் எதிர்பாராத வகையில் தேவாலயத்தினுள் மக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்தது.

இலங்கையில் என்ன நடக்கிறது என்றே யூகிக்க முடியதாத அளவிற்கு மக்கள் நிலைகுலைந்து போனார்கள். எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களும், மக்களிடையே பதற்றம், பீதியும் தொற்றிக் கொண்டு எங்கும் அழுகுரல்களே ஒலித்தன.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 253 பேர் பலியான நிலையில், 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வளவு பெரிய நாசவேலையை செய்த கும்பல் எது என்று யூகிக்க முடியாத அளவிற்கு தகவல்கள் பரவிய நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பின், பொறுப்பேற்றது.

அதுவரை சர்வதேச நாடுகளின் பார்வை வேறாக இருந்தாலும், ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பின், இலங்கையில் நடக்கும் சம்பவங்களை ஆய்வு செய்ய சர்வதேச புலனாய்வு அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவர்கள் வெளியிட்டு வரும் தகவல்கள் தெற்காசிய நாடுகளில் மதவாத தீவிரவாதத்தால் இலங்கை எப்படி குறிவைத்து தாக்கப்பட்டது என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில் இலங்கை அரசு அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது. அதோடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்கின்றன.

குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்களிடம் பெறப்பட்ட ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவை இலங்கையில் உள்ள தலைவர்களுக்கு தொடர்புடையதாக இருப்பதால், அந்நாட்டின் அமைச்சர்கள் அசாத் சாலி, இஸ்புல்லா  உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடந்தது. அதில், ஓர் அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நாட்டின் பாதுகாப்பில் உளவுதுறையின் முன்ெனச்சரிக்கையை கண்டும் காணாது இருந்த பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேம பெர்னாண்டோ, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இலங்கையின் சிஐடி மேற்கொண்டு வரும் மேற்கண்ட சம்பவத்துக்கான விசாரணைக்கு இங்கிலாந்தின் ஸ்காட்லாண்ட் யார்டு, அமெரிக்காவின் எப். பி. ஐ, இன்டர்போல் உள்ளிட்ட 6 நாடுகளின் விசாரணை அமைப்புகள் உதவி வருகின்றன.

அந்த அமைப்புகள் சார்பில் வௌியிடப்பட்ட புலனாய்வு தகவல்கள், இலங்ைகயில் ஐஎஸ் அமைப்பு காலூன்றியது ஏதோ ஒரே நாளில் அல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பே வேர்விட்டு மரமாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவம்: 1

கடந்த பிப்ரவரி 6ம் தேதி இலங்கையின் போதை பொருள் கடத்தல் நிழல்உலக தாதா மாகந்துரே மதூஷ் உட்பட 25 பேரை துபாய் போலீசாரால் கைது செய்தனர்.

இவர்களில் கஞ்சி பானை இம்ரான், கெசல்வத்தே தினுக்க உள்ளிட்டவர்களும் அடங்கும். துபாயில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மதூஷ் தனது மகனின் பிறந்த நாள் விழா கொண்டாடிய போது துபாய் போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுடன் பிரபல பாடகர் அமால் பரீரா உள்ளிட்ட சிலரும் கைதாகினர்.

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தே இலங்கையில் பல்வேறு கொலை, போதை பொருள் கடத்தல் போன்ற செயல்களை செய்ததாக இலங்கை சிஐடி தெரிவித்திருக்கிறது. மேலும், மதூஷை கைது செய்ய சர்வதேசப் போலீசாரின் உதவியை இலங்கை அரசு நாடியது குறிப்பிடத்தக்கது.சம்பவம்: 2

கடந்த ஜனவரி 17ம் தேதி இலங்கை போலீசின் புலனாய்வு அமைப்பான சிஐடி போலீசார், லாக்டோவாட்டா அடுத்த வானாதாவில்லுவா என்ற குக்கிராமத்தில் 100 கிலோ வெடிபொருட்களை கைப்பற்றினர். இந்த பகுதியானது இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

கொழும்பு நகரில் புத்தர் சிலை தொடர்பான விவகாரத்தில் போலீஸ் வேட்டையின் போது, இந்த ெவடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இங்குதான், ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் சிஐடி போலீசார், அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனை, 3 மாதங்கள் கழித்து அந்நாட்டின் அமைச்சர் கபிர் ஹஷிம் உறுதிசெய்துள்ளார். மேற்கண்ட சம்பவத்தில் ெதாடர்புடைய சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் முக்கிய அரசியல் பிரமுகரின் தனிப்பட்ட செல்வாக்கால் விடுவிக்கப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன.சம்பவம்: 3

ஐஎஸ் ஆதரவு அமைப்பின் பயிற்சி தளமாக கடந்த 2 ஆண்டுக்கு முன்பே மாற்றப்பட்ட லாக்டோவாட்டா பகுதியின் சீரியஸ்னசை, இலங்கை சிஐடி போலீசார் உணரவில்லை. காரணம், இவர்களுக்கு பின்புலமாக இருந்தது இலங்கையின் நிழல் உலக தாதாவும் வௌிநாடுகளில் தலைமறைவாக இருந்த மாகந்துரே மதூஷ் தான்.

இவன்தான், உள்ளூர் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் ஆயுத சப்ளை செய்துள்ளான். கிட்டதிட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக லாக்டோவாட்டா என்ற இடத்தில் இருந்தே, சர்வதேச நாடுகளுக்கு போதை மருந்து கடத்தல், ஆயுத சப்ளை, உள்ளூர் பிரமுகர்கள் கொலை ேபான்ற சமூக விரோத செயல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.சம்பவம்: 4

தெற்காசியாவில் போதை பொருள் கடத்தல் பிலிபைன்ஸ் நாட்டில் அதிகமாக நடப்பதால், அவற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருவது போல், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருள் சப்ளை அமோகமாக நடக்கிறது. அண்டை நாடான இலங்கையை மையமாக கொண்டே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து கடத்தப்படும் போதை பொருட்கள் மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் இலங்கையின் நிழல் உலக தாதா மாகந்துரே மதூஷ்க்கு ‘இன்டர்போல்’ போலீஸ் சார்பில் ‘ப்ளூ’ நோட்டீஸ் அனுப்பியது. இவன், சி4 வெடிகுண்டுகள் (பிளாஸ்டிக் ஆடிஎக்ஸ் வெடிகுண்டுகள்) மற்றும் ஆயுதங்களை இலங்கையில் உள்ள ஐஎஸ் ஆதரவு குழுவுக்கு அனுப்பி உள்ளான்.
சம்பவம்: 5

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பாதுகாப்பு அமைச்சரின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்து, தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியானது. உள்ளூர் தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தீவிரவாத தடுப்பு புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குனர் நாலக்க டி சில்வா மற்றும் பாடகர் அமால் பரேரா, மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், வௌிநாட்டுக்கு தப்பிய மதூஷ் உள்ளிட்ட சிலர் பிப்ரவரியில் துபாய் போலீசார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பவம்: 6

இந்திய அரசின் புலனாய்வு அமைப்பான ‘ரிசர்ச் அண்ட் அனாலிசிங் விங்’ எனப்படும் ‘ரா’ இலங்கையில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் தொடர்பாக பல்வேறு உளவு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்தியாவின் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் இலங்கையின்  மாகந்துரே மதூஷ்க்கும் உள்ள ெதாடர்புகள் குறித்தும் ஆதார பூர்வமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கடந்த ஓராண்டுக்கு முன் கேரளாவில் போதை பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த சிலரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, தற்போது நடந்துள்ள தாக்குதல், அந்நாட்டை சர்வதேச அரங்கில் ஐஎஸ் தாக்குதலுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. அதனால், இலங்கை அதிலிருந்து மீண்டு தனது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது.சம்பவம்: 7

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை உருவாக்கிய முகமது ஜாஹ்ரன் ஹஷீம், காத்தான்குடி இஸ்லாமியக் கல்லூரியில் படித்தவன். ‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, நாங்கள் இவரைப் பற்றி புகார் செய்தோம்.

யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லை’’ என்கிறார் இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் துணைத் தலைவரான ஹில்மி அகமது. தேசிய தவ்ஹீத் ஜமாத் வளர ஆரம்பித்தப் பிறகு, பல பகுதிகளில் புத்தர் சிலைகளின் முகங்கள் சிதைக்கப்பட்டன.

இவ்விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஜாஹ்ரன், தெற்காசிய நாடுகளின் ஐஎஸ் அமைப்புக்கு முக்கிய பிரதிநிதியாக இருந்துள்ளான்.

அவனின் பெரும்பாலான வீடியோக்கள் இந்தியாவிலிருந்துதான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

.

மூலக்கதை