இன்று மலைக்கு திரும்புகிறார் அழகர்

தினகரன்  தினகரன்
இன்று மலைக்கு திரும்புகிறார் அழகர்

மதுரை:  மதுரை நகரின் முக்கிய விழாவான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப். 19ல் நடந்தது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் வேடம் பூண்டு எழுந்தருளி விடிய, விடிய பக்தர்களுக்கு  காட்சியளித்தார். பின்பு தல்லாகுளத்தில் இருந்து பெருமாள் கோயில் சென்றார். ஒவ்வொரு மண்டகப்படியாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் மலை நோக்கி புறப்பட்டார்.இன்று காலை 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க மலைக்கு கள்ளழகர் வந்து சேர்கிறார். அங்கு அவருக்கு பக்தர்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றி, கோயில் பகுதிக்குள் வரவேற்று அழைத்துச் செல்கின்றனர். நாளை  உற்சவ சாந்தியுடன் சித்திரைதிருவிழா நிறைவடைகிறது.

மூலக்கதை