அமேதி தொகுதியில் ராகுல் வேட்புமனு ஏற்பு

தினகரன்  தினகரன்
அமேதி தொகுதியில் ராகுல் வேட்புமனு ஏற்பு

அமேதி: அமேதி மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கம் போல் உபி.யில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியிலும் கூடுதலாக கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்காக அவர்  கடந்த 10ம் தேதி அமேதியிலும், ஏப்ரல் 4ம் தேதி வயநாட்டிலும் வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் வரும் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி தனது வேட்பு மனுவோடு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பெயர், குடியுரிமை, கல்வித் தகுதி ஆகியவை குறித்து தவறான தகவல்கள் அளித்திருப்பதாக சுயேச்சை வேட்பாளர் துருவ் லால்  உள்ளிட்ட 4 பேர் குற்றம்சாட்டினர். இதனால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அமேதியில் மட்டும் வேட்புமனு பரிசீலனையை தேர்தல் அதிகாரி தள்ளி வைத்தார். இதனிடையே துருவ் லால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி பிரகாஷ், ராகுலின் கல்வி சான்றிதழ், இங்கிலாந்து குடியுரிமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்தார். இதையடுத்து இதுகுறித்து 22ம் தேதி விசாரணை நடத்தப்படும்  என தேர்தல் அதிகாரி அறிவித்தார். இது தொடர்பாக பதிலளிக்க ராகுல் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்தியின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நேற்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மூலக்கதை