5 நட்சத்திர ஓட்டலில் லோக்பால் ஆபிஸ்

தினகரன்  தினகரன்
5 நட்சத்திர ஓட்டலில் லோக்பால் ஆபிஸ்

புதுடெல்லி: லோக்பால் அமைப்பானது டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தற்காலிகமாக இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஊழலை ஒழிப்பதற்காக ெகாண்டு வரப்பட்ட லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி பினாகி சந்திர கோஸூக்கு கடந்த மார்ச் 23ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  அமைப்பின் 8 உறுப்பினர்களுக்கும் கடந்த 27ம் தேதி தலைவர் கோஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் லோக்பால் அமைப்பின் அலுவலகம் தற்காலிகமாக 5 நட்சத்திர ஓட்டலில் இயங்கவுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். டெல்லியின் சாணக்கியபுரியில் உள்ள ‘தி அசோக்’ ஓட்டலில் லோக்பால் அமைப்பு செயல்பட உள்ளது. இங்கு அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை