வாக்காளர்களுக்கு பணம் தமிழக தேர்தலை ரத்து செய்ய கோரும் மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி

தினகரன்  தினகரன்
வாக்காளர்களுக்கு பணம் தமிழக தேர்தலை ரத்து செய்ய கோரும் மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதால், தேர்தலை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதால், இங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை அதிகம் பணம் புழங்கும் தொகுதிகளாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இங்கு ₹78.12 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்களர்களுக்கு பணம்  கொடுக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால்  வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என  ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தேர்தலுக்காக அரசு செலவழித்த பணத்தை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் அல்லது கட்சிகளிடம் வசூலிக்க  வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ‘‘இது குறித்து தேர்தல் ஆணையத்தின் பதிலை கேட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த  நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் தேர்தல் ஏற்கனவே முடிந்துவிட்டதால், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை’’ என கூறிவிட்டனர்.

மூலக்கதை