இமாச்சலில் 12ம் வகுப்பில் 62.01% பேர் தேர்ச்சி

தினகரன்  தினகரன்
இமாச்சலில் 12ம் வகுப்பில் 62.01% பேர் தேர்ச்சி

தர்மசாலா:  இமாச்சலப் பிரதேசத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 62.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் 95,492 பேர் தேர்வு  எழுதினார்கள். இவர்களில் 62.01 சதவீதம் பேர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16,102 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதமானது முந்தைய ஆண்டுகளை காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது. 2017ம் ஆண்டு 72.89 சதவீதமும், 2018ம் ஆண்டு 70.18 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 62.01 ஆக குறைந்துள்ளது.

மூலக்கதை