கால தாமதமாக தொடங்கிய சுப்ரீம் கோர்ட் நடவடிக்கைகள்

தினகரன்  தினகரன்
கால தாமதமாக தொடங்கிய சுப்ரீம் கோர்ட் நடவடிக்கைகள்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற பெண் ஊழியர்  ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார்.  இதுகுறித்து விசாரணை நடத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையிலான விடுமுறைக்கால அவசர அமர்வு நேற்று கூடியது. அப்போது நீதிபதிகள்  தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா, அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்படும்  வழக்குகளை பட்டியலிட்டனர். இதனால் வழக்கமாக காலை 10.30 மணியளவில் தொடங்கும்  உச்ச நீதிமன்ற 15 அமர்வுகளின் நீதிமன்ற நடவடிக்கைகள், 15 நிமிடங்கள் தாமதமாக காலை 10.45 மணிக்கு  தொடங்கியது. தலைமை நீதிபதி மீதான வழக்கு  குறித்து நீதிபதிகள் கூட்டம் நடப்பதால், நீதிமன்ற நடவடிக்கைகள் காலதாமதமாக  தொடங்கியதாக வழக்கறிஞர்கள் மத்தியில் கருத்து நிலவியது.தன்மீதான குற்றச்சாட்டின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாக கோகாய் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை