கேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு

தினகரன்  தினகரன்
கேரளாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கி சென்ற பெண் ஆட்சியர்: பல்வேறு தரப்பினர் பாராட்டு

திரிச்சூர்: கேரள மாநிலத்தில் பெண் ஆட்சியர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரபெட்டிகளை வாக்குச்சாவடிக்கு தானே தூக்கிச்சென்ற காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 3-ம் கட்ட வாக்குபதிவு கேரள மாநிலத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், திரிச்சூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்கும் பணியில் ஊழியர்கள் மற்றும் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திரிச்சூர் ஆட்சியர் அனுபாமா தானே முன்வந்து அதிக எடை கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகளை இறக்கி அலுவலங்களுக்கு தூக்கி சென்றார். ஆட்சியர் அனுபாமாவின் இச்செயல் சமூக வளைதளங்களில் பரவி வருவதுடன், பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

மூலக்கதை