குண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்

தினமலர்  தினமலர்
குண்டு வெடிப்பு: நாளை இலங்கை பார்லி. அவசர கூட்டம்

கொழும்பு: இலங்கையில், 'ஈஸ்டர்' தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 'இலங்கை வரலாற்றில், பொதுமக்களை பாதிக்கும் வகையிலான தொடர் குண்டு வெடிப்பு இதுவரை நடந்ததில்லை கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து அந்நாட்டு பார்லிமென்ட் அவசர கூட்டம் நாளை (ஏப். 23) கூடுகிறது. குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த நடவடிக்கைள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை