சின்னமான் கிராண்ட் ஓட்டலில் தற்கொலை தாக்குதல்: ஓட்டல் மேலாளர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சின்னமான் கிராண்ட் ஓட்டலில் தற்கொலை தாக்குதல்: ஓட்டல் மேலாளர் தகவல்

கொழும்பு: சின்னமான் கிராண்ட் ஓட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தற்கொலை படையைச் சேர்ந்தவன் என்று, ஓட்டல் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கையில் சின்னமான் கிராண்ட் என்ற ஓட்டலில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியவர் குண்டுவெடிப்பை நிகழ்த்தவே அந்த ஓட்டலில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்று நடந்த குண்டுவெடிப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் காலை உணவுக்காக ‘பபே’ சிஸ்டமில், தற்கொலை படையைச் சேர்ந்த அந்த வரிசையில் நின்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை ஓட்டலில் அறை எடுத்த அவர், தனது பெயர் முகமது அசாம் முகமது என பதிவு செய்துள்ளார்.இதுகுறித்து ஓட்டல் மேலாளர் கூறுகையில், ‘காலை 8. 30 மணி இருக்கும். அப்போது ஓட்டல் பரபரப்பாக இருந்தது.

அனைவரும் குடும்பத்தினருடன் ஈஸ்டரை கொண்டாட வந்திருந்தனர். அப்போதுதான் அந்த தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் காலை உணவுக்காக பபே சிஸ்டமில் நின்றிருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் குண்டுகளை வெடிக்க செய்தார்.

இந்த தாக்குதலில் விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்த எங்கள் அதிகாரியும், அந்த தாக்குதலை நடத்தியவரும் உயிரிழந்தனர்’ என்றார்.

.

மூலக்கதை