காமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
காமசூத்ரா நடிகை திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது

மும்பை: காமசூத்ரா 3டி படத்தில் நடித்த நடிகை திடீர் மரணம் அடைந்தார். ஆங்கிலம், இந்தியில் காமசூத்ரா என்ற படம் கடந்த 2013ம் ஆண்டு முப்பரிமாணத்தில் (3டி) உருவானது. ருபேஷ் பால் இயக்கினார்.

முதலில் ஷெர்லின் சோப்ரா நடிக்க ஒப்பந்தம் ஆகி சில காட்சிகள் படமாக்கப்பட்டது. பட குழுவினருடன் ஏற்பட்ட மோதலால் ஷெர்லின் அப்படத்திலிருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக புதுநடிகையை தேடியபோது தோதாக யாரும் கிடைக்கவில்லை. கடைசியில் சாய்ரா கான் நடிக்க முன்வந்தார்.

முதல் படத்தில் துணிச்சலாக கவர்ச்சி காட்சிகளில் நடித்ததால் அவருக்கு பரபரப்பான இமேஜ் கிடைத்ததே தவிர புதிய படங்கள் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் சாய்ரா கான் நேற்று திடீரென்று மாரடைப்பில் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து இயக்குனர் ருபேஷ் கூறும்போது, ‘‘காமசூத்ரா 3டி படத்தில் நடிக்க சாய்ராவை அணுகியபோது அவர் நடிக்க மறுத்தார். நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார்.

இதுவொரு துணிச்சலான படம். நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சாய்ராவை தவிர வேறுயாரும் அந்த பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்திருக்க மாட்டார்கள்.

அவரது மரணம் அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

.

மூலக்கதை