இறகு பந்து போட்டி துவக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இறகு பந்து போட்டி துவக்கம்

ஆலந்தூர்: சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு பேட்மின்டன் அசோசியேஷன் சார்பில், இறகு பந்து சூப்பர் லீக் போட்டிக்கான அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்நாடு பேட்மின்டன் அசோசியேஷன் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இறகு பந்து சூப்பர் லீக் போட்டியின் விளம்பர தூதரான நடிகர் பரத், பைக் ரேஸ் வீராங்கனை ஆயிஷா அப்துல்லா, அசோசியேஷன் பொது செயலாளர் அருணாசலம் முன்னிலை வகித்தனர்.

இந்த சூப்பர் லீக் போட்டி வரும் ஜூன் 3ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் திருப்பூர் வாரியர்ஸ், கரூர் ஸ்மேசர்ஸ், சென்னை பிளையிங் கிராவிட்டி, சென்னை-மெரினா சூப்பர் கிங், காஞ்சி ஸ்பார்க் ஆக்சஸ், திருவள்ளூர் டைட்டன்ஸ், திருச்சி பிளாஸ்டர், கோவை நேக்கர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

.

மூலக்கதை