உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு லாரா பாராட்டு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு லாரா பாராட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆட்டம் பாராட்டும் வகையில் இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் ஆல்ரவுண்ட் ஆட்டம் மெச்சத்தகுந்த விதமாக உள்ளது என அவர் புகழ்ந்தார். கோப்பையை தக்க வைக்க வேண்டுமெனில், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் இந்தியா தற்போதைய நிலையை தொடர வேண்டும் என லாரா அறிவுறுத்தினார். குரூப் B பிரிவில் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தோனியின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதாக லாரா தெரிவித்தார். எந்தவொரு மைதானத்திலும் திறம்பட விளையாட முடியும் என்பதை தனது நாட்டு அணிக்கு சச்சின் டெண்டுல்கர் நிரூபித்துக் காட்டிவிட்டதால், இந்திய வீரர்கள் தற்போது முந்தைய மன நிலையில் இருந்து விடுபட்டுவிட்டதாக பிரைன் லாரா குறிப்பிட்டார்.

மூலக்கதை