23 ஆண்டுகால பகையை மறந்து பரம எதிரிகளாக இருந்த முலாயம் சிங்கும், மாயாவதியும் ஒரே மேடையில் தேர்தல் பரப்புரை

தினகரன்  தினகரன்
23 ஆண்டுகால பகையை மறந்து பரம எதிரிகளாக இருந்த முலாயம் சிங்கும், மாயாவதியும் ஒரே மேடையில் தேர்தல் பரப்புரை

லக்னோ : உத்தரப் பிரதேச மாநில அரசியலில் பரம எதிரிகளாக இருந்த முலாயம் சிங்கும், மாயாவதியும் 23 ஆண்டுகால பகையை மறந்து ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்தனர்.23 ஆண்டுகால பகை1993ம் ஆண்டில் சமாஜ்வாதி  கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கைகோர்த்து உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தனர். ஆனால் 2 ஆண்டுகள் கழித்து அரசுக்கு அளித்த வநத ஆதரவை மாயாவதி வாபஸ் பெற்றதால்  முலாயம் சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 1995ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி லக்னோவில் விருந்தினர் இல்லத்தில் கட்சியினருடன் மாயாவதி ஆலோசனை நடத்தி கொண்டிருந்த போது, சமாஜ்வாதி தொண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு பிறகு இரு கட்சிகளும் எலியும் பூனையும் போல பகைமை பாராட்டி வந்தனர்.  பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணிஇந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தல் சந்திக்கின்றனர். முலாயம் சிங் போட்டியிடும் மெயின்புரியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முலாயம் சிங், மாயாவதி ஆகியோர் பங்கேற்றனர். முலாயம் சிங்  தலைமையில் நடைபெற்ற இந்த் பொதுக் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ராஷ்த்ரிய லோக்தல் கட்சித் தலைவர் அஜித் சிங் ஆகியோரும் பங்கேற்றனர். கருத்து வேறுபாடுகளை மறந்து சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார்.முலாயம் சிங் ஆதரவாக மாயாவதி பரப்புரை இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முலாயம் சிங், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மிகவும் மரியாதைக்குரியவர் என்றும் சமாஜ்வாதி தொண்டர்கள் அவருக்கு மிகவும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதே போல முலாயம் சிங் தான் பிற்படுத்தப்பட்டோரின் உண்மையான தலைவர் என புகழ்ந்துரைத்த மாயாவதி, அவருக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் முலாயம் சிங் மோடியை போல பொய்யான தலைவர் என்றும் மாயாவதி கூறினார்.

மூலக்கதை