கொல்கத்தாவை பழிதீர்க்குமா பரிதாப பெங்களூரு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொல்கத்தாவை பழிதீர்க்குமா பரிதாப பெங்களூரு

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா 8 போட்டிகளில் 4ல் வெற்றி, 4ல் தோல்வி அடைந்துள்ளது.

கடைசி 3 போட்டியிலும் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த கொல்கத்தா இன்று சொந்த மண்ணில் வெற்றிபாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அதிரடி வீரர் ரஸ்சல் காயத்தால் அவதிப்படுவதால் இன்று ஆடுவது சந்தேகம் தான்.

மறுபுறம் பெங்களூரு அணி 8 போட்டியில் 1ல் மட்டுமே வென்றுள்ளது. இன்றைய போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோகும் என்பதால் கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் இறங்குகிறது.

பேட்டிங்கில் கோஹ்லி, டிவில்லியர்சையே பெரிதும் நம்பி உள்ளது. ஆனால் பந்து வீச்சு சொதப்பி வருகிறது.

இன்று ஸ்டெயின் களம் இறங்குவது சற்று ஆறுதலான அம்சமாகும். ஏற்கனவே நடப்பு சீசனில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்திருந்தது.

அதற்கு பழி தீர்க்குமாஎன்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இரு அணிகளும் இதுவரை விளையாடிய 23 போட்டியில் கொல்கத்தா 14, பெங்களூரு 9ல் வெற்றி பெற்றுள்ளது.

.

மூலக்கதை