தைவான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் மக்கள் ஓட்டம்

தினகரன்  தினகரன்
தைவான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் மக்கள் ஓட்டம்

தைபே: தைவான் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.  பொதுமக்கள் அச்சத்தால் அலயடித்து சாலைகளுக்கு ஓடிவந்தனர்.தைவான் தலைநகர் தைபேயில் நேற்று மதியம் வழக்கம்போல் மக்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மணி  அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து சாலைகளில்  தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் சுமார் 30 நொடிகள் வரை நீடித்ததாக  அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பல கட்டிடங்களில் பெரும் விரிசல் ஏற்பட்டதாக  தெரியவந்துள்ளது. கடந்த 1999ல் தைவானில், 7.6 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 2000 பேர்  உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை